search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய விமானப்படை"

    • அப்பாச்சி ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் லடாக் பகுதியில் தரையிறக்கப்பட்டது.

    லடாக்:

    இந்திய விமானப்படையின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கட்டுப்பாட்டு பேனலில் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டரை லடாக்கில் அவசரமாக தரையிறக்கினர். அதில் பயணித்த இரண்டு பைலட்டுகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விமானப்படை அதிகாரிகள், ஹெலிகாப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    • விமானப் படைக்குச் சொந்தமான போர்விமானம் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.
    • விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜாஸ் இலகு ரக போர்விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

    • நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, கர்த்வயா பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

    குடியரசு தின விழாவில் பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்

    இந்நிலையில், விமானப்படை வீரர்கள், படை தலைவர் சுமிதா யாதவ் மற்றும் பிரதிதி அஹூவாலியா தலைமையில் அணிவகுத்துச் சென்றனர்.

    ரபேல் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான போர் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

    விமானப்படையின் வலிமையை எடுத்துரைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட விமானப்படையின் அலங்கார ஊர்தியும் ஊர்வலத்தில் சென்றது.

    • மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • நீர்மூழ்கி வாகனம் பதிவுசெய்த படங்களை ஆய்வு செய்ததில் விமான பாகங்கள் உறுதி செய்யப்பட்டன.

    சென்னை:

    சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம் வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது திடீரென மாயமானது. இதில் விமான ஊழியர்கள் 6 பேர், 11 விமானப்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த தலா ஒரு வீரர், கடற்படை ஆயுதக் கிடங்கு ஊழியர்கள் 8 பேர் என 29 பேர் பயணம் செய்தனர்.

    தொடர்பு துண்டிக்கப்பட்டதும் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ராடாருடன் கூடிய செயற்கைக்கோள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டது. எந்த முன்னேற்றமும் இல்லாததால் செப்டம்பர் 15-ம் தேதி தேடும் பணி கைவிடப்பட்டு, அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சமீபத்தில் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி வாகனம் பதிவுசெய்த படங்களை ஆய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 3.4 கி.மீ. ஆழத்தில் கிடக்கும் பாகங்கள் காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.
    • இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை வீடியோக்கள் வைரல்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு நாளை மதியம் 1.30 மணியளவில் விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.

    இதற்கான ஒத்திகை நேற்று துவங்கிய நிலையில், இன்றும் விமானப்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.

    இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபடும் என்றும் இதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு பொதுவாக ஒன்பது விமானங்களைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான கண்காட்சிகளில் அதன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. 

    இறுதிப் போட்டியை நேரில் காண பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

    • இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள விண்ணப்பிக்கலாம்.
    • 27-6-2003 முதல் 27-12-2006வரைக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

    திருப்பூர்:

    இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறஉள்ளது. இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள இருபாலர்களும் 17-8-2023 வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்திடலாம்.எழுத்துத்தேர்வு 13-10-2023 பின் நடைபெறவுள்ளது.

    இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேருவதற்கு தகுதியான வயது 27-6-2003 முதல் 27-12-2006வரைக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் இரு பாலரும் கலந்துகொள்ளலாம்.மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள தகுதியான இருபாலர்கள் ஆட்சேர்ப்புக்கு பதிந்து முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
    • விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தன.

    லடாக்கில் உள்ள லே விமான நிலையத்தில். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையின் நடுவில் நின்றுவிட்டது. அந்த விமான நிலையத்தில் ஒரே ஒரு ரன்வே மட்டுமே இருப்பதால் வேறு எந்த விமானத்தையும் இயக்க முடியாத நிலை உருவானது. எனவே, அங்கிருந்து புறப்படும் மற்றும் வரக்கூடிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    நிலைமையை சரி செய்யவும், திட்டமிட்டபடி நாளை விமானங்களை இயக்கவும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், இதுபற்றி அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும் என்றும் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும், முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு விமான சேவைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளன. 

    • 31-ந்தேதி கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கு 26.12.2002 முதல் 26.6.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

    பள்ளி கல்வி வாரியங்க ளின் கவுன்சிலில் உறுப்பினராக பட்டியலிடப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத் துடன் 10-ம் வகுப்பு, பிளஸ்-2-க்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும்.

    முதற்கட்ட தேர்வாக இணைய வழியில் பொதுஅறிவு மற் றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும். 2 தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac. in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப் பைப் பார்த்து தேர்வு முறை, தேர்வுக்கு வேண்டிய ஆவணங் கள் உள்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியு டையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க. வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசிநாள் ஆகும்.

    மேலும் விவரங்களுக்கு 04175-233381என்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண் பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • விமான படைக்கு 70 எச்.டி.டி. 40 ரக அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய விமான படையில் புதிதாக விமானிகளாக சேர்க்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையாக உள்ள அடிப்படை பயிற்சி விமானங்களின் பற்றாக்குறையை நீக்க ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 828 கோடியே 36 லட்சம் மதிப்பில் இந்திய விமான படைக்கு தேவையான 70 எச்.டி.டி. 40 ரக அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தினை ஊக்குவிக்கும் முயற்சியாகவும் இந்திய வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு இருக்கும். இந்த விமானங்கள் 6 ஆண்டுகளில் ஒப்படைக்கப்படும். இந்த விமானம் குறைந்த வேகத்தில் கையாள கூடிய தன்மைகளை நல்ல முறையில் கொண்டுள்ளதுடன், சிறந்த பயிற்சி அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கப்படும் சூழலால், இந்திய ஆயுத படைகளின் வருங்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மேம்படுத்துதலை செய்யும் வசதியையும் விமானம் கொண்டிருக்கும்.

    சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்பட இந்திய தனியார் தொழிற்சாலைகளை இந்த தயாரிப்பு பணிக்கு எச்.ஏ.எல். ஈடுபடுத்தும் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த விமான கொள்முதலால், 100-க்கும் கூடுதலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த 1,500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெறும்.

    • 400 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • கப்பலில் உள்ள இலக்கை ஏவுகணை தாக்கியதாகஇந்திய விமானப் படை தகவல்.

    பாதுகாப்பு பணியில் இந்திய விமானப்படையும், இந்திய கடற்படையும் இணைந்து செயல்படும் வகையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை இன்று வங்காள விரிகுடா பகுதியில் நடைபெற்றது.

    சுகோய்-30 ரக போர் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை கப்பலில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பில் இந்தியா ஆதிக்கம் செலுத்த இந்த ஏவுகணை சோதனை உதவியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

    • பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் வசதி உள்பட உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
    • மின்சார வாகன இயக்கத்தை விமானப்படை தலைமை தளபதி தொடங்கி வைத்தார்.

    சுற்றுச் சூழல் மேம்பாட்டு நடவடிக்கையாகவும், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காகவும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை, தமது போக்குவரத்துப் பயன்பாடுகளுக்கு டாடா நெக்ஸான் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    டெல்லியில் உள்ள விமானப்படைத் தலைமை அலுவலகமான வாயு பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் 12 மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சௌத்ரி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


    வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் வசதி உள்பட உள்கட்டமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட மின்-வாகனங்களுக்கான பயன்பாட்டிற்கான சூழல் அமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    மின்சார பேருந்துகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவது தொடர்பாக, இந்திய விமானப்படை ஏற்கனவே இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து இயக்கத்தை நோக்கிய பயணத்தில், இந்திய விமானப் படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×